ஓடும் ரெயிலில் பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டிய பயணி கைது

66பார்த்தது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டிய பயணி கைது
பழனியில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று காலை பழனியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏ. சி. பெட்டியில் சென்னையை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார். அதே பெட்டியில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 45 வயது ஆண் பயணி ஒருவர் திடீரென அந்த பெண் முன் சென்று ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார். ரெயில் நாமக்கல் அருகே வந்த போது அந்த பெண் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி