சேலம்: ரயிலில் ஓசி பயணம் செய்த 8, 390 பேரிடம் ரூ. 48,61,065 அபராதம்

69பார்த்தது
சேலம்: ரயிலில் ஓசி பயணம் செய்த 8, 390 பேரிடம் ரூ. 48,61,065 அபராதம்
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்பவர்கள், சாதாரண பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்கள், என அவ்வப்போது ரெயில்வே கோட்ட நிர்வாகம் சிறப்பு குழு அமைத்து அதிரடி சோதனை நடத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 4 ஆயிரத்து 59 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ. 31 லட்சத்து 25 ஆயிரத்து 495 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல சாதாரண பயணச்சீட்டை வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 287 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 17 லட்சத்து 14 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதே போல் லக்கேஜ் கட்டணம் செலுத்தாமல், 44 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 21 ஆயிரத்து 270 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் 15 நாட்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 8 ஆயிரத்து 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 48 லட்சத்து 61 ஆயிரத்து 65 அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி