சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (37). இவர் தனது தாயுடன் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இரவு 7 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இது குறித்து சதீஷ் கிச்சிப்பாளைம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் வீட்டின் பூட்டை உடைத்து
நகையை திருடிச் சென்றது
தெரிந்தது. இதையடுத்து, இந்த திருட்டில் ஈடுபட்ட சூரமங்கலம் வெள்ளைய கவுண்டன் தெருவை சேர்ந்த முருகன்(23), இவரது தம்பி மோகன்ராஜ்(22), தினேஷ்குமார்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.