சேலம் அன்னதானப்பட்டி போலீசார் நெத்திமேடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே. பி. கரடு பகுதி யில் லாட்டரி சீட்டுகள் விற்ற சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 37), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சிவகுமார் (40), பரமத்திவேலூரை சேர்ந்த சஞ்சய் பிராங்களின் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். போலீ சார் விசாரணையில் அவர்கள் அந்த பகுதிகளில் வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை கல்லூரி மாணவர்க ளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.