வெளி மாநிலங்களிலிருந்து இருந்து 1, 540 போலீசார் சேலம் வருகை

79பார்த்தது
வெளி மாநிலங்களிலிருந்து இருந்து 1, 540 போலீசார் சேலம் வருகை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த போலீசார், துணை ராணுவத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர தேர்தல் பாதுகாப்பு பணியில் ஓய்வுபெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே நேற்று ஆந்திராவில் இருந்து 450 போலீசார், 650 ஊர்க்காவல் படையினர், கேரளாவில் இருந்து 100 போலீசார் மற்றும் கர்நாடகம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 340 மத்திய பாதுகாப்பு படையினர் என மொத்தம் 1, 540 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு ரெயில்கள் மூலம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
அவர்கள் மாவட்டத்தில் எந்ததெந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விரைவில் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி