மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க 1, 308 சக்கர நாற்காலிகள் தயார்

84பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க 1, 308 சக்கர நாற்காலிகள் தயார்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 1, 257 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3, 260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதனிடையே சேலம் அழகாபுரம் புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சாரதா பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பின்னர் இதுகுறித்து தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியதாவது: -

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 1, 257 வாக்குச்சாவடி அமைவிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் தலா ஒரு உதவியாளருடன் கூடிய சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 7 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள 51 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உதவியாளருடன் கூடிய 2 சக்கர நாற்காலிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1, 308 சக்கர நாற்காலிகள் உதவியாளருடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி