வரும், 15ல், சுதந்திர தின விழாவை, அனைத்து பள்ளிகளில் தேசிய கொடியேற்றி, எளிமையாக கொண்டாட, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில், முன் கள பணியாளராக செயல்படும் சுகாதார, தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களை விழாவுக்கு அழைத்து சிறப்பிக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை அழைத்து பேசச்செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.