ஓமலூர் அருகே தங்கள் புகைப்படங்கள்

83பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கள் புகைப்படம் அச்சிட்ட நோட்டுகள் வழங்கி ஆசிரியயை அசத்தல்,

தாரமங்கலம், ஆரூர்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியை வி. கஸ்தூரி, மாணவர்களை ஊக்கப்படுத்த புதுமையான பரிசுகள் வழங்கி வருகிறார்.

2024 புத்தாண்டின் முதல் நாளாக பள்ளிக்கு வந்த, 1-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் அனைவருக்கும், அவரவர் வண்ண புகைப்படத்தை முகப்பு அட்டையாக அச்சிட்ட நோட்டு புத்தகத்தை பரிசாக வழங்கி அசத்தினார்.

மாணவ, மாணவிகளுக்கு சிறந்த ஊக்குவிப்பு அளிக்கும் விதமாக பள்ளி ஆசிரியையின் இச்செயலை தலைமையாசிரியை தாமரைச்செல்வி மற்றும் பெற்றோர்கள் மற்றும் பலரும் ஆசிரியைக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி