சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்புநாதர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு மகா சக்கர காலபைரவருக்கு நேற்று தேய்பிறை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மகா ஹோமம், மகாதீபாரதனை நடைபெற்றது.
இதில் ஓமலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.