புத்தாண்டு தினத்தன்று Zomato உணவு டெலிவரி செயலியில் பல பயனர்கள் 'காதலி'யைத் தேடியுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Zomato நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025 புத்தாண்டு தினத்தன்று, Zomato செயலியில் 4,940 பேர் 'காதலி'யைத் தேடியுள்ளனர். மேலும், 40 பயனர்கள் Zomatoவில் திருமணத்திற்கு 'மணமகளை' தேடியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.