சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

62பார்த்தது
சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு சர்வ முகூர்த்தக்கால் நடுதல், வீட்டில் முளைப்பாரி போடுதல், ஆலயத்தில் கங்கணம் கட்டுதல், 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், மகாபூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. காலை 10. 30 மணிக்கு ராமகவுண்டனூர் புடவைக்கார அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது.
காலை 9. 15 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசம் புறப்பாடு, முதலில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், இதையடுத்து பூரணகலா, புஷ்பகலா சமேத அய்யனாரப்பன் மற்றும் பாப்பாத்தி அம்மன், கருப்பனார், முனியப்பன், விநாயகர், முருகன், சப்தகன்னிமார்கள், முன்னுடையார், குதிரை வாகனம், கஜவாகனத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா அபிஷேகம், அலங்காரம், சுவாமிகளுக்கு திருமாங்கல்ய தாரணம், கோபூஜை, தசதானம், தச தரிசனம், தீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி