சேலம் காவிரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 26ல் விபத்தில் படுகாயமடைந்து. சேலம் காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்ட விபத்தில் மணிக்கட்டில் படுகாயம் ஏற்பட்டு அதன் காரணமாக கை துண்டிக்கப்பட்டிருந்தது.
விபத்து ஏற்பட்ட 2 மணி நேரம் கழித்து ஐஸ் பெட்டியில் துண்டிக்கப்பட்ட கையுடன் பாதுகாப்பாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எலும்பியல் நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 6 மணி நேரம் நீடித்த, கை மறுப்பொருத்தும் அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மென்மையான திசுக்களை (தசைநார், நரம்பு, ரத்தநாளம், தமனி) நுணுக்கமாக சரி செய்வதையும் மேற்கொண்டார்.
அறுவை சிகிச்சைக்குப்பின் அழற்ச்சியை தடுக்க காயத்திற்கான முறையான சிகிச்சை வழங்கப்பட்டு. தொடர்ந்து 14 நாட்களுக்குப் பிறகு அவரது கை நன்கு குணமாகிய நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் கடந்த 2மாதங்களாக மேற்கொண்டு வந்த நிலையில் தற்பொழுது பூரண குணமடைந்துள்ளார். துண்டிக்கப்பட்ட கைகளை இணைத்து சாதனை புரிந்த சேலம் மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.