சேலம் மாவட்டம் ஓமலூர், கள்ளிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லைப்பிடாரி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு ஆடித் திருவிழா தொடங்கியது.
இதனையடுத்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை சக்தி அழைத்தல், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாலை அக்னி கரகம், பூங்கரகம் எடுத்தும், பக்தர்கள் அம்மன் வேடமிட்டு நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.