வெல்ல ஆலைகளில் கண்காணிப்பு

569பார்த்தது
வெல்ல ஆலைகளில் கண்காணிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட ஆய்வில் கலப்பட வெல்லம் தயாரித்த 100க்கும் மேற்பட்ட ஆலைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை, ஹைட்ரோஸ், ப்ளீச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி