சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பனங்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி வரவேற்றார். இதில், மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகள் 99 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது, பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியை கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் ஓமலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பெரியசாமி, ஆறுமுகம், விமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.