ஓமலூர் அருகே கோரைக்கழிவு தீ பற்றி எரிந்து விபத்து..

51பார்த்தது
ஓமலூர் அருகே கோரைக்கழிவு தீ பற்றி எரிந்து விபத்து..
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் பெரியேரிப்பட்டி கிராமம் வேடப்பட்டி என்னும் இடத்தில் குடியிருப்பு வீட்டின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த கோரை கழிவுகள் தீப்பிடித்து எரிந்து அருகாமையில் இருந்த மாட்டு தீவன பயிர்களுக்கு தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் விபத்து குறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீ பற்றிய இடத்திற்கு தீயணைப்பு ஊர்தி செல்ல வழி இல்லாத காரணத்தால் தீயணைப்பு வீரர்கள் அருகாமையில் இருந்த தண்ணீரை எடுத்து வாளி மூலம் ஊற்றி தீயை முழுவதுமாக அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி