விஜயகாந்த் படத்திற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்

68பார்த்தது
விஜயகாந்த் படத்திற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்
விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு தே. மு. தி. க. வினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விஜயகாந்த் மறைவு காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அனைத்து கட்சி சார்பில் தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இதையொட்டி காடையாம்பட்டியில் இருந்து தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் வரை மவுன ஊர்வலம் நடந்தது. இதனையடுத்து பொம்மியம்பட்டி ஊராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். காடையாம்பட்டி ஒன்றிய தி. மு. க. செயலாளர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய அ. தி. மு. க. மாணவரணி செயலாளர் விஜயன், தே. மு. தி. க. ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் தேவேந்திரன், பா. ஜனதா ஒன்றிய செயலாளர் மதிவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பிரகாஷ் மற்றும் தி. மு. க. , அ. தி. மு. க. , பா. ஜனதா, தே. மு. தி. க. , விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி