சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மூலக்காடு பகுதியில் உள்ள ஜல்லி கிரசரில் ஏரியூர் அருகே தின்னபெல்லூரை சேர்ந்த சக்திவேல் (வயது 38) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இவர் கிரஷரில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கன்வேர் பெல்ட்டில் அவர் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.