வீட்டுச்சுவரில் எச்சரிக்கை வாசகம், போலீசில் புகார்!

58பார்த்தது
வீட்டுச்சுவரில் எச்சரிக்கை வாசகம், போலீசில் புகார்!
மேட்டூர்; கடன் தவணையை கட்ட தவறியதால் வீட்டைச்சுற்றிலும் சுவற்றில் எச்சரிக்கை வாசகம் எழுதிய நிதிநிறுவன ஊழியர்கள்
அவமானப்படுத்தியதாக எஸ்பி ஆபிசில் தறித்தொழிலாளி புகார்!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தோரமங்கலம், காப்பரத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (33). இவர் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக மாதேஷ் 20 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு தவ ணையாக மாதந்தோறும் ₹29, 373 கட்டவேண்டும் அவ்வாறு 150 தவணைகளில் இந்த பணத்தை திருப்பி கட்டவேண்டும். இதுவரை தவணைகளில் 3 தவணை மாதேஷ் கட்டியுள்ளார். மற்றதை கட்டவில்லை இந்தநிலையில், அந்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் மாதேஷின் வீட்டுக்கு வந்து பணத்தை கட்டும்படி கூறினர். அப்போது, மாதேஷ் ஒரு வாரத்தில் பணத்தை கட்டுவதாக கூறியுள்ளார். ஆனால், ஊழியர்கள் அவரை திட்டியதோடு அவர் கட்டியுள்ள புதிய வீட்டின் சுவற்றை சுற்றிலும் கருப்பு மையால் வாசகங்களை எழுதினர். அதில் எச்சரிக்கை, இந்த சொத்து தனியார் நிதி நிறுவன கடனில் உள்ளது' என எழுதப்பட்டிருந்தது. இதனால் மனவேதனையடைந்த மாதேஷ் இதுபற்றி சேலம் SP அலுவலகத்தில் புகாரளித்தார். அதில் பணத்தை ஒரு வாரத்தில் கட்டுகிறேன் என தெரிவித்தபோதும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என்னை அவமானப்படுத்தும் வகையில் வீட்டைச் சுற்றிலும் எச்சரிக்கை வாசகங்களை எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி