பெரியார் பல்கலைகழகத்தில் கல்வித்தொகை ரூ. 1கோடி மோசடி

590பார்த்தது
பெரியார் பல்கலைகழகத்தில் கல்வித்தொகை ரூ. 1கோடி மோசடி
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரியார்
பல்கலைக்கழகத்தில் வெப் டிசைன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சிலர் இன்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது கடந்த 2021 முதல் 2023 வரை 324 மாணவ-மாணவிகள் இந்த பிரிவில் படித்து வந்ததாகவும் அவர்களுக்கு
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ. 2. 66 கோடி பல்கலைகழகத்திற்கு ஒதுக்கியதாகவும் அந்த பணத்தை மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதாக கூறி வங்கி கணக்கு தொடங்கி அதன்
ஏடிஎம் கார்டுகளை 2 பேர் வாங்கி கொண்டு சில மாணவர்களுக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம் கொடுத்துவிட்டு ரூ. 1 கோடியை மோசடி செய்து
விட்டனர். மேலும் மாணவ-மாணவிகளிடம் வாங்கி வைத்துக்கொண்ட அசல் சான்றிதழ்களையும் தர மறுப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி