சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமத் தில் கோமாளியூர், அண்ணா நகர், மேட்டுக்காடு ஆகிய பகுதி களில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு வழங்கி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மேற்பார்வை யாளராக நியமிக்கப்பட்ட மணிவேல் என்பவர் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி தன்னிச்சையாக குடிநீர் இணைப்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோ கம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தாரமங்க லத்தில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கோமாளியூர் பிரிவு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.