தீபாவளி நாளில் மழைக்கு வாய்ப்பு

65பார்த்தது
தீபாவளி நாளில் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.28) முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், தீபாவளி நாளான அக்டோபர் 31ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.