மேட்டூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). இவர் ஒரு விபத்தில்
கை, கால் செயல் இழந்து குடும்பம் நடத்துவதற்கு வழியின்றி வறுமையில் தவித்து வந்தார். இதையறிந்த மேட்டூரை சேர்ந்த ராஜ்யசபா எம். பி. சந்திரசேகரன் தனது சொந்த செலவில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பால் பூத்தை தயார் செய்தார். தொடர்ந்து ஆவின் நிர்வாகத்திடம் பேசி அவருக்கு பால் வினி யோகம் செய்யும் வாய்ப்பை வாங்கி கொடுத்தார். பின்னர் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே மாற்றுத்திற னாளியான கவுதம் பால் பூத் வைக்க சந்திரசேகரன் எம். பி. வழிவகை செய்து கொடுத்தார். இதனிடையே பால் பூத்தை சந்திரசேகரன் எம். பி. திறந்து வைத்து பால் விற்பனையை தொடங்கி வைத்தார்.