கர்நாடகா பகுதியில் பலத்த மழை பெய்து வந்ததால் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் பொதுமக்கள் மற்றும் சமூக அர்வலர்கள் உடன் இருந்தனர்.