சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சீரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32) லாரி டிரைவர். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது மணி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.