மேட்டூரில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

50பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர் தேக்க பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகா அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.
கர்நாடகா அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி கர்நாடகா அணைகள் நிரம்பியதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 45, 598 கன அடியாக இருந்த நிலையில் இன்று மாலை 68, 032 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட தண்ணீரானது நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்பதால் அணையின் நீர் தேக்க பகுதியான செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி