சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் காவிரி உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்காக மேட்டூர் அணை திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து நீரை திறந்து வைத்து அங்கிருந்து முதலில் காவிரி உபரிநீர் வரும் மேச்சேரி எம். காளிப்பட்டி ஏரியில் உபரிநீரில் மலர் தூவி வரவேற்றார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா வருகிற 17-ம் தேதி மேச்சேரி எம். காளிப்பட்டி ஏரியின் அருகில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து பாராட்டு விழா நடைபெறும் பகுதியில் மேடை அமைக்கும் பணிக்கு முகூர்த்த கால நடும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் சந்திரசேகர் எம்.பி., மாநில பொறுப்பாளர்கள் கலையரசன், எமரால்டு வெங்கடாசலம், மாவட்ட பொறுப்பாளர்கள் சித்தன், லலிதா, மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி உபரிநீர் திட்ட விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.