சேலம்: காவிரி கரையோரத்தில் ராட்சத நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் காவிரி உபரி நீரை பயன்படுத்தி 100 ஏரிகளை நிரப்ப செய்யும் வகையில் 525 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் சரபங்கா நீர்பாசனத் திட்டம் செயல்படத்தபடுகிறது.
அணையின் நீர் தேக்க பகுதியான திப்பம்பட்டி, காவிரி கரையோரத்தில் ராட்சத நீர் தேக்கத்தொட்டி அமைக்கபட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது.