சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடசென்னி மலையில் அமைந்துளள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 1-ஆம் தேதி துவங்கியது ஆறாவது நாள் திருவிழாவாக அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு பின்னர் மாலையில் மகா தீபாரதனை செய்யப்பட்டது. பின்னர் இரவு சூரசம்கார விழாவில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி வேலை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து கோவிலைச் சுற்றி ஊர்வலமாக வந்து முருகப்பெருமான் அவரது ஞானவேலால் வதம் செய்தார் அப்போது நரகாசுரன் யானை முகம் , ஆடு உள்ளிட்ட நான்கு விதமான அவதாரங்களைக் கொண்டு உருவெடுத்தபோதும் முருகன் தனது ஞானவேலால் வதம் செய்தார், இந்நிகழ்ச்சியில் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காட்டுக்கோட்டை சதாசிவபுரம் சாத்தப்பாடி ஆத்தூர் சின்ன சேலம் கள்ளக்குறிச்சி வீரகனூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.