சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை காட்டம்மன் கோவில் அருகே அரசுக்கு சொந்தமான மலைப்பகுதி உள்ளது இந்த மலைப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.