கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் உயிருடன் மீட்பு

57பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் உயிருடன் மீட்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல், விவசாயி. இவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று காலை 3 புள்ளி மான்கள் தத்தளித்து கொண்டிருந்தன. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒரு மான் இறந்து விட்டது. அந்த மானின் உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து உயிருடன் உள்ள மான்கள் மற்றும் இறந்த மானின் உடலை வனத்துறையினரிடம் தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். இதில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மான்களுக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்த பிறகு சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி