ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவார்கள் என்பதால், நாளை முதல் 7 நாள்கள் (ஆக. 3 வரை) தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் விநாடிக்கு 5000 கன அடி வீதம் அடுத்த 7 நாள்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.