ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் செப். 14-ம் தேதி கச்சிக்குடாவில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், செப். 16-ம் தேதி கொல்லத்தில் இருந்து கச்சிக்குடாவிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் செப். 13-ம் தேதி பிற்பகல் 03.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், இரவு 08.28 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். 2 நிமிடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புறப்படும் ரயில், மறுநாள் காலை 08.30 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.