சாத்தப்பாடி ஊராட்சியில் ரூ. 69லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை

54பார்த்தது
சாத்தப்பாடி ஊராட்சியில் ரூ. 69லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை
சேலம் மாவட்டம் தலைவாசல் மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தப்பாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அருப்பு பட்டறை முதல் பூமாலை உடையார் தோட்டம் வரை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 69 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. தி. மு. க. மத்திய ஒன்றிய செயலாளர் சாத்தப்பாடி மணி கலந்து ெகாண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் கிளை செயலாளர் கைராசி ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமர், ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி