பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி

50பார்த்தது
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி
பீஸ்ட் பாக்சிங் கிளப், சேலம் சிட்டி பிரதர்ஸ் ஆகியவை சார்பில் 2024 புத்தாண்டை வரவேற்கும் வகையில் சேலம் மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட குத்துச்சண்டை சங்கம், சேலம் பாக்சிங் கிளப், ஜி பிட்னஸ், நாமக்கல் பாக்சிங் கிளப், எச். பி. சி. ஓமலூர், சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கம், ரியல் கிக் பாக்சிங் மார்சியல்ஆர்ட், , ஐயன் பாக்சிங் கிளப் ஆகியவற்றை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி