ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள் பதிவு செய்ய வேண்டும்

80பார்த்தது
ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள் பதிவு செய்ய வேண்டும்
சேலம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள். சிகிச்சையகம் மற்றும் ஆரோக்கிய மையம் நடத்துவோர் தங்கள் மையம் குறித்து இணையதளத்தில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தெரிவித்துள்ளதாவது: இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள்

ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள், சிகிச்சையகம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் சேவைகளை பயன்படுத்தும் வகையில் வெளிநாட்டினர்களுக்கு Visa செயல்முறையை எளிதாக்குவதற்கு மருத்துவம் மற்றும் ஆயுஷ் விசா இணையதளம் (Medical and Ayush Visa Portal) உருவாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள். சிகிச்சையகம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் போன்றவற்றை நடத்தும் அனைத்து தொழில் முனைவோர்களும் இச்செய்தி வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குள் https//: indianfrro. gov. in/frro/medicalvaluetravel/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி