பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

54பார்த்தது
பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28 எண்ணிக்கையிலும், மாணவியர்களுக்கு 9
எண்ணிக்கையிலும் என மொத்தம் 37 விடுதிகளும், கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு 5 எண்ணிக்கையிலும், மாணவியர்களுக்கு 6
எண்ணிக்கையிலும் என மொத்தம் 11 விடுதிகளும் என மொத்தம் 48 விடுதிகள்
செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே. மாணவர்/ மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், விபரங்கள் பெற 0427- 2451333/94454 77849 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.