அரசு பள்ளியில் புதர்மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானம்

74பார்த்தது
அரசு பள்ளியில் புதர்மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானம்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சித்தர் கோவில், நல்லணம்பட்டி, கல்பாரப்பட்டி, ராமாபுரம், இடங்கணசாலை, தூதனுர், மடத்தூர், தப்பகுட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பரந்து விரிந்த விளையாட்டு மைதானம் உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களும் காலை நேரங்களில் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சீரமைக்கப்படுமா?
இப்படி மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள விளையாட்டு மைதானம் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே முட்செடிகள், கோரை புற்கள் முளைத்து வளர்ந்து நிற்கின்றன. மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இந்த மைதானத்தில் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிகிறது.
எனவே புதர் மண்டி காட்சி அளிக்கும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. பள்ளி மைதானத்தை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி