1, 589 பேருக்கு ரூ. 58½ லட்சம் அபராதம்

83பார்த்தது
1, 589 பேருக்கு ரூ. 58½ லட்சம் அபராதம்
சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, அரூர், பாலக் கோடு உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா? , விதிமுறைக்குட்பட்டு இயக்கப்படுகிறதா? என்று போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் போக்குவரத்து அதி காரிகள் சோதனை நடத்தி அளவுக்கு அதிக மாக சரக்குகளை ஏற்றி சென்ற வாகனங்க ளுக்கும், விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதித் தனர். விதிகளை மீறியதாக 1, 589 வாகனங்க ளுக்கு ரூ. 58½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி