தேவூர் அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து

85பார்த்தது
தேவூர் அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து
சேலம் மாவட்டம் தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி செங்கானூர் பாலம் பகுதியை சேர்ந்தவர் சின்ன கண்ணு. இவருடைய மகன் பூபதி (வயது 30). மெக்கானிக். இவர் அந்த பகுதியில் தகர கூரை வேய்ந்த வீட்டில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். மேலும் அதில் மோட்டார் வாகன பொருட்களை வைத்துள்ளார். நேற்று மதியம் திடீரென மின்கசிவால் தீ்ப்பிடித்துள்ளது. இதில் வீடு மற்றும் மோட்டார் வாகன பொருட்கள் எரிந்தது. மேலும் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, காவேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி