இளம்பிள்ளை அரசு பள்ளி மாணவிகளுக்கு நிதி உதவி.

82பார்த்தது
இளம்பிள்ளை அரசு பள்ளி மாணவிகளுக்கு நிதி உதவி.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை , எளிய மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிர்மலா செல்வம் ஏற்பாட்டில் பத்தாம் வகுப்பு , பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு உள்ளிட்டவைகளுக்கு நடைபெற்ற பொது தேர்வில் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவிகளுக்கு ரூ. 40, 000 மதிப்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் ராஜமாணிக்கம் பிடிஏ கழகத் துணைத் தலைவர் அருண், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் ஜெயக்குமார், சண்முகசுந்தரம் , பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர் , ஆசிரியைகள், மாணவிகள் , பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவிகளுக்கு ஆயிரம் விகிதம் பாடப்பிரிவு ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி