சிவகங்கை மாவட்டம் காரைக்குடி100 அடி சாலையில் பிரபல ரவுடியும் கஞ்சா வியாபாரியுமான மனோஜ் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் குரு பாண்டியன், விக்கி என்ற விக்னேஸ்வரன், சக்திவேல் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள சுரேஷ், மதன், பாலா ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.