‘இட்லி கடை' வெளியீடு ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து கொஞ்சம் தள்ளிப்போகிறது. இன்னும் 10-20% படப்பிடிப்பு மீதமுள்ளது. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் போன்ற நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டியதால், அவர்களின் நேரத்தை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதால், அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விரும்புகிறோம். புதிய வெளியீட்டுத் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிப்போம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.