விவசாயிகள் பயன்பெறும் வகையில் எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. PM-KUSUM திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி அமைப்பு ஏற்படுத்தி தரப்படும். இது டீசல் மற்றும் மின்சாரத்தை சார்ந்திருப்பதை குறைக்கும். இத்திட்டம் விவசாயிகளை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதுடன் விவசாயத்தை நிலையானதாக ஆக்குகிறது. எரிசக்தி பாதுகாப்புடன், கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.