பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்

58பார்த்தது
ஆத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கூட்ரோடு பகுதியில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரை ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி