ஆத்தூரில் உலக நன்மைக்காக பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வசிஷ்ட நதிகரையோரம் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் கோவில். கோவிலில் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது 300-க்கும் மேற்பட்ட பெண்கள் குங்குமம், மாங்கல்யம் வைத்து குடும்ப நலன் வேண்டியும் உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜை செய்தனர். மேலும் பெரிய மாரியம்மன் க்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடைபெற்றது.