மூன்றுதலைமுறைகளாகபட்டாஇல்லைஅமைச்சரிடம்மனு அளித்த பெண்

56பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று மக்கள் சந்திப்பு திட்ட முகம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி முன்னிலையில் நடைபெற்ற முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வருவாய்த்துறை, மருத்துவத்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அஞ்சலை என்ற பெண் ஒருவர் தங்கள் பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களுக்குஇதுவரை பட்டா கிடைக்கவில்லை பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சுற்றுலாத்துறை அமைச்சர் இடம் மனு அளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் பெண்ணின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மேடையின் அருகில் கண்ணீரோடு காத்திருந்தார். மேலும் இதுகுறித்து அஞ்சலை கூறும் பொழுது மூன்று தலைமுறைகளாக பகுதியில் வசித்து வரும் எங்களுக்குபட்டா வழங்காமல் இருப்பதாகவும் தற்போது கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ஊராட்சி தலைவர் அனுமதிக்க மறுப்பதாகவும் ஏன் என்று தெரியவில்லை என கண்ணீரோடு தெரிவித்தார். மேலும் பட்டா வழங்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என புலம்பியவாறு பேசினார். வருவாய்த் துறையினர் அஞ்சலை மனு மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி