கிணற்றுக்குள் தவறி விழுந்த டிராக்டர்

68பார்த்தது
ஆத்தூர் அருகே கிணற்றுக்குள் டிராக்டர் தவறி விழுந்ததால் விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நீண்ட போராட்டத்திற்கு பின் ட்ராக்டரை மீட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏர் உழுவதற்காக டிராக்டர் இயக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக பின்னோக்கி சென்ற டாக்டர் அருகிலுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதில் முருகேசன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். விபத்து குறித்து தகவல் இருந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் டிராக்டரை கிணற்றுள் இருந்து மீட்டனர்.

தொடர்புடைய செய்தி