ஏற்காட்டில் பெண்ணை தாக்கியவர் கைது

81பார்த்தது
ஏற்காட்டில் பெண்ணை தாக்கியவர் கைது
சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் கிராமம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜோதி சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு சதீஷ்குமார், சந்தோஷ் என்ற 2 மகன்களும், ஜனனி, பேபி ஷாலினி ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்களில் சந்தோசுக்கு 2019-ம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சந்தோஷ் இறந்துவிட்டார். அதன்பிறகு நந்தினி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சேலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நந்தினி அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இதை அறிந்த சந்தோசின் சகோதரர் சதீஸ்குமார் மற்றும் அவரது தாயார் மகேஸ்வரி, மகள்கள் ஜனனி, பேபி ஷாலினி ஆகியோர் அங்கு வந்து நந்தினியை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்காடு போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேஸ்வரி மற்றும் அவரது மகள்கள் ஜனனி, பேபி ஷாலினி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி