ஆத்தூர் GH முன்பு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

53பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வால்கரடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். டிரைவரான இவரது பதினாறு வயது மகன் மலை அடிவாரப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இங்கு வரக்கூடாது என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகிய இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ரவிக்குமார் அவரது மனைவி மற்றும் 16 வயது மகன், ஆகியோர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் சுரேஷ் ரவிக்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறி சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தாங்கள் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் - கடலூர் பிரதான சாலையான காமராஜர் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் இருந்து வந்த ஆத்தூர் டி. எஸ். பி. , சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்

தொடர்புடைய செய்தி